Translate

Saturday, 24 August 2013

குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம்

குழந்தைகளுக்கு சளிகபம்இருமல்தீர எளிய சித்த மருத்துவம் 



குழந்தைகளுக்கு சளி, கபம், இருமல், தீர எளிய சித்த மருத்துவம் 


Venkatesan Sanjiv
எனக்கு இரண்டு குழந்தைகள் . அவர்கள் இருவருக்கும்  அடிக்கடி சளி மற்றும் இருமல் வருகிறது . வயது 4 & 2. இங்கிலீஷ் மருந்து என் 2 , வயது பெண்ணுக்கு கேக்கவில்லை. நாங்கள் துளசி & கற்பூரவள்ளி இரண்டும் சேர்த்து கொடுத்தால் சளி போகிறது . இதை அடிக்கடி கொடுக்கலாமா . இல்லை வேற எதாவது இருந்தால் கூறவும்.

மேற்கண்ட கேள்விக்கான விளக்கம் :


பொதுவாக சளி ,கபம் என்பது உடலில் மூன்று நிலைகளில் நோய் களாக தாக்குகின்றது.

1 - மூக்கு மற்றும் நெற்றி பகுதிகள்
2 -
தொண்டை பகுதிகள்
3 -
நுரையீரல் பகுதிகள்

முதலில் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் தான் வைரஸ் கிருமிகள் தாக்கும். பின்பு பரவி சில நாட்களில் நெஞ்சு மற்றும் நுரையீரல் பகுதி களில் பரவி விடும்.

சித்த மருத்துவ முறையினில் மேற்கண்ட மூன்று நிலைகளிலும் உள்ள சளி ,கபம் நோய்களுக்கு தனித்தனியாக மருந்துகள் உள்ளன.

மூக்கு பகுதிகளின் சளியினைப் போக்க சிறு குழந்தைகளுக்கு துளசி , மற்றும் கற்பூர வள்ளி இலைச் சாறுகள் ஒரு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சேர்த்து காலை,மாலை என இரண்டு வேளை கொடுக் கலாம்.

தொண்டைப் பகுதிகளின் கபத்தினைப் போக்க கண்டங்கத்திரி, தூதுவளை,  மொசுமொசுக்கை போன்ற மூலிகைகளின் சாறு சங்கு அளவு எடுத்து முறித்து தேன் சம அளவு கலந்து காலை,மாலை, இரண்டு வேளை கொடுத்து வர கபம் நீங்கும்.

நெஞ்சு ,மற்றும் நுரையீரல் பகுதிகளின் நாட்பட்ட சளி,இருமல். கபத்தினை போக்க ஆடாதொடை இலைச்சாறு நன்கு பலன் அளிக்கும். இது நோயெதிர்ப்பு சக்தியை கொடுத்து மீண்டும் சளி தோன்றுவதிலிருந்து பாதுகாக்கும்.ஆனால் மேற்கண்ட முறைகளை சித்த மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் செய்வது நன்று.

நீங்கள் குறிப்பிடும் 2 - 4 வயது குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்சனைகளுக்கு சித்தா மருந்து கடைகளில் ஆடாதொடை மணப்பாகு, ஆடாதொடை இளகம் என்ற பெயரில் சித்தா சிரப் கிடைக்கும்.அதனை வாங்கி 2 - வயது குழந்தைக்கு அரை டீஸ்பூன் அளவு மூன்று வேளை கொடுத்து வரவும்.

4 -
வயது குழந்தைக்கு ஒரு டீஸ்பூன் அளவு மூன்று வேளை கொடுத்து வர சளி , இருமல், கபம் நன்கு குணமாகும்.மீண்டும் அடிக்கடி சளி பிடிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

சித்த மருத்துவ முறையினில் சளி, இருமல் ,கபம், இளைப்பு, ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு மேற்கண்ட மூலிகைகள் மட்டுமல்லாது சித்த  மருந்துகள் ஏராளமாக உள்ளது.அதில் 

சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், வால்மிளகு, தாளிச பத்திரி,  அக்ரகாரம், கஸ்தூரி, கோரோசனை,போன்ற காரமான  கடைச்சரக்குகள் உள்ளன.

திரிகடுகு சூரணம், தாளிசபத்திரி சூரணம், ஏலாதி சூரணம், தூதுவளை லேகியம், தாளிசாதி வடகம், சுவாச குடோரி மாத்திரை,போன்ற ஏராள மான மருந்து வகைகள் உள்ளன.

இவைகளை சித்த மருத்துவர்களின் ஆலோசனைப் படி உண்ண கப  நோய்கள் விரைவில் குணமாகும்.



நன்றி !
சித்த மருத்துவர் பிரியா
[ Dr.PRIYA  B.S.M.S.,M.D., ]
siththarkalathisayam.blogspot.com
siththarkalathisayam@gmail.com