Translate

Saturday 17 August 2013

எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை

எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை 




நத்தைச்சூரி மூலிகை

எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை 

உனக்கென்ன சூரிய கிரணந்தன்னில் 
உதயமாம் சூரிவேர் காப்புக் கட்டி 
எனக்கென்ன உபசரித்து வேரை வாங்கி 
எந்திரமாய் வெள்ளி செம்பில் பொதித்து 
தனக்கென்ன எதிரி வந்து தாக்கும் போது 
தாக்குவாய் மணிகட்டிச் சிங்கம் போல் 
உனக்குமவன் தோற்றோடிப் போவான் 
உனைக் கண்டால் சர்ப்பம் போல் ஒடுங்குவானே 
                                                மச்சமுனி - 800

சூரிய கிரகணம் அன்று கிரகணம் பிடிக்கும் போது நத்தைச்சூரி மூலிகை க்கு காப்புக் கட்டிசாப நிவர்த்தி செய்துபலி கொடுத்து வேரை  பறித்து வெள்ளி,செம்பு இரண்டையும் சேர்த்து உருக்கி தாயத்து போல்  செய்து அதனுள் நத்தைச்சூரி வேரை வைத்து மூடி வலதுகை புஜத்தில்  காப்பு ரட்சையாக கட்டிக் கொள்ளவும்.

நம்மைக் காணும் எதிரிகள் அஞ்சி நடுங்குவர்.பருந்தைக் கண்ட பாம்பைப்போல் அடங்கி ஒடுங்குவர்.சண்டை செய்ய நேரிட்டால் சிங்கத்தைக் கண்டது போல் மிரண்டு ஓடிப் போவான்.

சித்தர்கள் அதிசயம் தொடரும்.....


நன்றி !
சித்த மருத்துவர் பிரியா
[ Dr.PRIYA  B.S.M.S.,M.D., ]
siththarkalathisayam@gmail.com  


4 comments:

  1. ஆஹா. இது ஒரு நல்ல செய்தி. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஆனால் எங்க ஊரில் இம்மூலிகை கிடைக்க அரிது

    ReplyDelete
  3. Where to buy the nathaisuri mooligai?
    Thiruvalluvar.

    ReplyDelete