Translate

Thursday, 22 August 2013

யோகா - தியானம் நன்மை தீமைகள் விளக்கம் - YOGA - MEDITATION

யோகா - தியானம் நன்மை தீமைகள் விளக்கம் - YOGA - MEDITATION 


யோகா தியானம் நன்மை தீமைகள் விளக்கம் - YOGA - MEDITATION 

இன்று வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நமது இந்தியாவின் பாரம்பரிய கலைகளான யோகா, தியானம் போன்ற கலைகளும் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகின்றது

இது வரவேற்கத்தக்கவைதான்.ஆனால் இவற்றை கற்பிக்கும் ஆசான்கள் இவைகளில் உள்ள நன்மை,தீமைகளை அறிந்து பின்பு கற்பிக்கின்றார்களா என்பது கேள்விக்குரியதாகும்.

YOGA - யோகா என்பது உடலையும், உள் உறுப்புக்களையும் வலிமைப் படுத்துவது ஆகும்.இதில் பல்வேறு வகையான செயல் முறைகள் உள்ளன

MEDITATION - மெடிடேசன் - தியானம் என்பது மூளையின் செயல்பாடுகளை யும் மனம்எண்ணம் போன்றவற்றை ஒருமுகப் படுத்து வதற்கும்மேன்மைப் படுத்துவதற்கு உகந்ததாகும். இதிலும் பல்வேறு வகையான செயல்முறை கள் உள்ளன.

யோகா, தியானம் இவை இரண்டும் முன்பு காலங்களில் யோகிகளும்முனிவர்களும், சித்தர்களும் தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்த அரிய கலைகள் ஆகும்.இவைகளை பயிற்சி செய்வதில் பல அரிய சூட்சும இரகசியங்கள் உள்ளன.எனவே தான் இதன் விளக்கங்களை நேர்முகமாக சீடர்களின் தகுதி அறிந்து உபதேசம் செய்து வந்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு  எளிமையான தியானம், யோகா போன்றவை மிகவும் அவசிய தேவை தான்.ஆனால் ஒரு சில யோகா மையங்களில் ஹடயோகம் எனப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கடுமையான யோகா முறைகளும் பயிற்றுவிக்கப் படுகின்றது.

ஹடயோகம் என்பது உடலை மிகவும் வருத்திக் கொண்டு செய்யும் ஒருவகையான வித்தை என்று கூடச் சொல்லலாம். இதனைப் பற்றி சித்தர்கள் பலர் கடிந்துள்ளனர்

இவற்றின் தீமைகளை சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

பாரப்பா தன்மயத்தை அறியாமற்றான் 
பக்தியுடன் அடயோகம் செய்வான் பாவி 
வீரப்பா மூச்சடக்கி செவி வாய் மூடி 
வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில் 
சாரப்பா மூலமதில் சொருகிக் கொண்டு
தலைவலித்து காதடைத்து முகமும் கோணி 
நேரப்பா கண் தெறித்து மதி கலங்கும் 
நேர்மை கெட்ட அடயோகம் தள்ளு தள்ளே
                அகத்தியர் வாத சௌமியம் - 1200 

"தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை" என்னும் பாடலுக் கிணங்க தன்மயமாகிய தன்னை அறிதலே முதல் தவமாகும். எனவே தன் நிலை அறியாமல் ஹடயோகம் செய்பவர்கள் பாவிகள் என்கின்றார்.

வேகத்துடன் மூச்சை இழுத்து [பூரித்துகண்,வாய் இவைகளை மூடி மூச்சை கும்பகம் செய்து அடக்கினால் தலைவலித்து, காதடைத்து, முகம் கோணி, கண் தெறித்து, மதி என்னும் அறிவு கலங்கி புத்தி பேதலித்து விடும்.ஆதலால் செய்வதற்கு புறம்பான  நேர்மை கெட்ட ஹடயோகத்தை செய்ய வேண்டாம் என அகத்தியர் சித்தர்  வலியுறுத்துகின்றார்.

சித்தர்கள் அதிசயம் தொடரும்.....


நன்றி !
சித்த மருத்துவர் பிரியா
[ Dr.PRIYA  B.S.M.S.,M.D., ]
          

  



      


3 comments:

  1. Nandru Mealum thodaravum thozha

    ReplyDelete
  2. சித்தர்கள் பற்றிய நற்செய்தி களை கலியுக மக்களுக்கு விளக்கவும்

    ReplyDelete